கம்பராமாயணம் 906 · பால 14.20

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்
ஆயவரை அந்நிலை அறிந்தனர் துறந்த ஆங்கு,
ஏய வரும் நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே,

பொருள் · Meaning in Tamil

தீயவரொடு ஒன்றிய - தீய குணத்தவரோடு (ஆராயாமல்) நட்புக் கொண்ட; அருதிறந்து நல்லோர் - அரிய திறமையுடைய நல்லவர்கள்; ஆயவரை - அந்தத் தீயவரை; அந்நிலை - அந்த அளவிலே; அறிந்தனர் - அவர் தீயவர் என்று அறிந்தவர்களாக; துறந்தாங்கு - (அவர்களைக்) கைவிட்டாற்போல; ஒள்பாய்பரி - பாய்ந்தோடும் நல்லிலக்கணம் பொருந்திய குதிரைகள்; ஏய அரு - தம் உடலில் பொருந்த; நுண்பொடி படிந்து - மண்ணிலே படிந்ததால் மிக நுண்ணிய புழுதியை; உடன் எழுந்து - உடனே எழுந்து; விரைந்து உதறி - விரைவாக உதறிவிட்டு; பரந்து நின்றன - பரவி நின்றன.

வழியில் வந்த இளைப்பைப் போக்க வேண்டிக் குதிரைகள் புழுதி படிந்த மண்ணில் புரளுதலும், இளைப்பு நீங்கியதும் அவை தம் மேல் படிந்த புழுதியை உதறி எழுதலும் இயல்பு. இதற்கு நற்குணமுள்ளவர் முதலில் தீயவரோடு நட்புக் கொண்டு பின்பு அவரோடு பழகி அவர்களின் தீக் குணத்தை உணர்ந்து அவர்களுடைய நட்பை அறவே துறத்தல் உவமையாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As good people of rare worth who have fallen in with the wicked
  2. drop them the moment they come to know what they are,
  3. the fine galloping horses, having rolled in the clinging fine dust, rose at once,
  4. shook it off quickly, and stood spread out.

What the poem says

Horses roll in the dust to shake off the tiredness of the road. Then they spring up and shake the dust off at once.

The poet compares this to good people who have, without thinking, made friends with bad ones. As soon as they find out what those people are really like, they shake off the friendship completely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyavaroṭu oṉṟiya tiṟattu aru nalattōr
āyavarai an nilai aṟintaṉar tuṟantāṅku,
ēya aru nuṇ poṭi paṭintu uṭaṉ eḻuntu oṇ
pāy pari viraintu utaṟi niṉṟaṉa parantē,