கம்பராமாயணம் 907 · பால 14.21

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மும்மை புரி - மூவகையாக (மண், பொன், பெண் ஆசைகள்) அமைந்த, வல்கயிறு - வலிய பிணிப்புக்களை; கொய்து - அறுத்து; செயல் மொய்ம்பால் - (தாம்) செய்யும் யோகத்தின் வலிமையால்; தம்மை உணர்ந்து - தமது ஆன்மாவின் உண்மை நிலை (ஆன்மா மலம் அற்றது; ஞான ஆனந்த மயமானது; கடவுளுக்கு அடிமையானது) தெரிந்து; தரை கண்டு - (அதனோடு நில்லாமல்) தாம் அடைய வேண்டிய பரம் பொருளின் நிலையையும் உணர்ந்து; விரைகின்ற - (அதனை அடையுமாறு) விரைந்து செல்லுகின்ற, இம்மையை அம்மையினொடு அறிந்து - இவ் உலகப் பயனை மறுமைப் பயனோடு உணர்ந்து; நெறி செல்லும் - நன்னெறியே செல்லுகின்ற; செம்மையவர் என்ன - நற்குணமுடைய யோகியரைப் போல; துரங்கம் - குதிரைகள்; மும்மை புரி வன் கயிறு - (தம்மைக்) கட்டிய முப்புரியாக அமைந்த வலிய கயிற்றை; கொய்து - அறுத்துக் கொண்டு; செயல் மொய்ம்பால் - (பாகனது) செயல் வல்லமையால், தம்மையும் உணர்ந்து - தாம் செய்ய வேண்டியன இன்னவை என்று அறிந்து; தரை கண்டு - நிலத்தின் இயல்பு அறிந்து; விரைகின்ற - விரைவாகச் செல்லுகின்றனவாகி; நனி சென்றன - மிக ஒழுங்காக வந்தன.

ஞான யோகியர் பரகதி அடைதற்குரிய நெறியில் விரைந்து செல்லும் முறை போன்று இருந்தது குதிரைகளின் ஒழுங்கான செலவு என்பது. உத்த ஆன்மா அறிவதற்குரிய ஐவகை நிலைகளாவன 1. வினைத் தடையாகிய விரோதி நிலை; 2. அத்தடையை நீக்கும் உபாய நிலை; 3. அந்த உபாயத்தை மேற்கொள்ளும் ஆன்ம நிலை; 4. அது நாடும் பரமான்ம நிலை; 5. வீடுபேறு. இவற்றையே “அர்த்த பஞ்சகம்” என்பர். தரை கண்டு: பரம்பொருள் தங்கும் தானம். மும்மை புரி வன்கயிறு: முப்புரியாக அமைந்த திண்ணிய கயிறு; ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் - சிலேடை. சிலேடை மூலமாக வந்த உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Snapping the strong rope of triple twist, through skill in their work,
  2. knowing themselves, seeing the ground and racing on,
  3. like the upright who know this world together with the next and walk the true path,
  4. the horses went on in fine order.

What the poem says

Every phrase in this verse has two meanings, one for the horses and one for holy men. The horses break their three-stranded tethering ropes, learn what is wanted of them through the driver's skill, judge the ground, and go forward in good order.

In the same way, yogis cut the three strong bonds of the soul: desire for land, gold and women, or in another reading the three impurities of ego, karma and illusion. Through the power of their discipline they come to know their true selves, find the "ground" where the Supreme dwells, and hurry on the right path, keeping both this life and the next in view.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mummai puri vaṉ kayiṟu koytu, ceyal moympāl,
tammaiyum uṇarntu, tarai kaṇṭu, viraikiṉṟa
ammaiyiṉoṭu immaiyai aṟintu neṟi cellum,
cemmaiyavar eṉṉa, naṉi ceṉṟaṉa turaṅkam.