கம்பராமாயணம் 9000 · யுத்த 26.16

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது போல் குலவி
விண்தானும் விழுங்க விரிந்ததனைக்
கண்டார் அவ் வரக்கர் கருங்கடலை.

பொருள் · Meaning in Tamil

உலகு ஒருவன் உள் கொண்டான் - உலகங்களை எல்லாம் ஒப்பற்ற திருமால் தன் திருவுந்தியுள் அடக்கி; உறைகின்றது போல் ஓர் ஆல் உண்டாயது - (தான்) தங்கி இருப்பது போன்ற (இலைகளைக் கொண்ட) ஓர் ஆலமரம் அங்கு உளதாயது; அவ் அரக்கர் கருங்கடல் குலவி - (அங்கு) அந்த அரக்கர் சேனையாகிய கரிய கடல் விளங்கி நிற்க; விண்தானும் விழுங்க விரிந்ததனைக் கண்டார் - விண்ணின் பரப்பும் தன்னுள் அடங்குமாறு விரிந்து பரந்திருப்பதனைக் (வானரர் கண்டார்.

ஊழிக்காலத்தில் உலகங்களையெல்லாம் தன் வயிற்றுள் அடக்கிக் காத்து பெருங்கடல் நடுவணதோர் ஆலிலையின் மீது பெருமாள் பள்ளி கொண்டிருப்பார் என்பது புராணம். அத்தகு ஆலிலை போன்ற ஆலிலைகளைத் தன்னிடத்துக் கொண்டதாய் விண்ணை அளாவி அதன் பரப்பினை உட்கொண்டதாய் அரக்கர் சேனை தன் அடியிடத்துக் குலவி இருப்பதாய் நின்றதொரு பெரும் ஆலவிருட்சத்தை வானரர் கண்டனர் என்பதாம். இச்செய்யுள் வந்த ‘கண்டார்’ எனும் பயனிலையைப் பின்வரும் செய்யுட்கள் நான்கிலும் உள்ள, ‘ஓர்பான்மையதை' ‘ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை' ‘சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை' ‘கடல் போல்வதோர் பான்மையதை' என வரும் செயப்படு பொருளோடும் கூட்டி முடிக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There stood a banyan, like the one on which the One
  2. who has taken the world within him lies; gathered there,
  3. spread so wide that it swallowed the very sky,
  4. they saw that dark ocean of rākṣasas.

What the poem says

At Nikumpalai the monkeys see a vast banyan tree, like the cosmic banyan on whose leaf Viṣṇu lies at the end of an age with all the worlds held inside him. Gathered beneath it, spreading so wide it seems to swallow the sky, is the dark sea of the rākṣasa army. The verb 'they saw' governs this and the next four verses, each of which describes another aspect of what they saw.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṭāyatu ōr āl ulakuḷ oruvaṉ
koṇṭāṉ uṟaikiṉṟatupōl kulavi
viṇtāṉum viḻuṅka virintataṉaik
kaṇṭār av arakkar karuṅ kaṭalai.