கம்பராமாயணம் 9001 · யுத்த 26.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நேமிப் பெயர் யூகம் நிரைத்து நெடுஞ்
சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமம் அத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை.
பொருள் · Meaning in Tamil
தீவினையோன் ஓமத்து அனல் - கொடுவினையாளனாகிய இந்திரசித்தனுடைய வேள்வித்தீயினை; நேமிப்பெயர் யூகம் நிரைத்து - சக்கர வியூகம் என்னும் பெயருடைய அணி பெற வகுத்து; நெடுஞ்சேமத்து நின்றது - (சூழ்ந்து) நீண்ட பாதுகாப்புடையதாய் நின்றதாகிய (அரக்கர் சேனை; வெவ் வடவைக்கு உடனே - வெம்மை மிக்க வடவைத் தீயைத் தன்னுட்கொண்டு; பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை - பரவிய அக்கடல் நின்றதோர் தன்மை உடையதனை (வானர வீரர் கண்டார்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Drawn up in the formation named for the wheel, a vast guard
- stood around the sacrificial fire of the evil-doer;
- it had the look of a wide-spreading sea standing
- with the fierce submarine fire in its midst.
What the poem says
The monkeys see the rākṣasa army drawn up in the circular 'wheel' formation (cakra vyūha) as a tight guard around Intiracittaṉ's sacrificial fire. It looks like the ocean holding within it the vaṭavai, the fierce mare-headed fire believed to burn under the sea.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nēmip peyar yūkam niraittu neṭuñ
cēmattatu niṉṟatu tīviṉaiyōṉ
ōmattu aṉal vev vaṭavaikku uṭaṉē
pāmak kaṭal niṉṟatu ōr pāṉmaiyatai.