கம்பராமாயணம் 9004 · யுத்த 26.20

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்ணக் கருமேனியின் மேல் - (அரக்கர்களின் கருநிறம் வாய்ந்த உடம்பின்மேல்; மழைவாழ் விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால் - மேகம் வாழ்கின்ற ஆகாயத்தைத் தொடும் அளவில் (உள்ள) செம்மயிர்கள் (ஒளியை) வீசுதலால்; அண்ணல் கரியான் அனல் அம்பு பட - கரிய திருமேனியை உடைய பெரியோனாகிய இராமனது தீக்கணை சுட்டு வெதுப்புதலால்; வெம்பண்ணைக் கடல் போல்வதோர் பான்மையதை - வெம்மையுற்ற நீர்த்திரளைக் கொண்ட (கருங்) கடலையொத்து விளங்கும் தன்மையினதாகிய (நிகும்பலை என்னும்) அதனை (வானரவீரர் கண்டார்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because on their dark-hued bodies
  2. red hair that touched the rain-filled sky flared out,
  3. it was like the sea, a mass of hot waters,
  4. when the dark noble one's fire-arrows struck it.

What the poem says

The rākṣasas have dark bodies topped with flaming red hair that seems to reach the clouds. Massed together, they look like the dark ocean when Irāmaṉ's fiery arrows struck it and set its waters seething, a scene recalled several times in this part of the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṇak karu mēṉiyiṉmēl maḻai vāḻ
viṇṇait toṭu cem mayir vīcutalāl
aṇṇal kariyāṉ aṉalampu aṭa vem
paṇṇaik kaṭal pōlvatu ōr pāṉmaiyatai.