கம்பராமாயணம் 9005 · யுத்த 26.21

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வழங்காசிலை நாணொலி வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக்குலமும்
தழங்கா கடல் வாழ்வனபோல்; தகைசால்
முழங்கா முகில் ஒத்தன மா முரசே.

பொருள் · Meaning in Tamil

சிலை நாண் ஒலி வழங்கா - (அரக்கர்கள் கையிற் கொண்ட) விற்கள், நாணொலியை வெளிப்படுத்தாதனவாய்; வானில் வரும் பழங்கார் முகம் ஒத்த - மேகத்தினிடத்தே தோன்றும் பழைய இந்திரவில்லை ஒத்தன; பணைக் குலமும் கடல் வாழ்வனபோல் தழங்கா - (அவர்களுடைய) வாத்தியத் தொகுதிகளும் கடலில் வாழ்வனவற்றையொத்து முழங்காமலிருந்தன; தகைசால் மாமுரசே முழங்கா முகில் ஒத்தன - தகுதி வாய்ந்த பெரிய முரசங்களும் இடி முழக்கஞ் செய்யாத மேகத்தை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their bows, whose strings stayed silent, were like the ancient bow
  2. that appears in the sky; their many drums too,
  3. like creatures living in the sea, made no sound; the great, noble war-drums
  4. were like clouds that do not thunder.

What the poem says

Intiracittaṉ's sacrifice requires silence, so his army stands soundless. The bows, their strings not twanged, are like the rainbow, Indra's bow, that hangs silent in the sky. The drums are mute like sea creatures, and the great war drums are like clouds that hold back their thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḻaṅkā nilai nāṇ oli vāṉil varum
paḻaṅ kārmukam otta; paṇaik kulamum
taḻaṅkā kaṭal vāḻvaṉapōl; takai cāl
muḻaṅkā mukil ottaṉa mā muracē.