கம்பராமாயணம் 9006 · யுத்த 26.22

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வலியான் அ(வ்)இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல்தான் எனலாய்
ஒலியாது உறுசேனையை உற்று ஒருநாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண்கிழிய.

பொருள் · Meaning in Tamil

ஒருநாள் மெலியாதவர் - ஒரு காலத்தும் தளர்ச்சியுறாதவராகிய வானர வீரர்கள்; வலியான இராகவன் வாய் மொழியால் - வலிமை மிக்கவனான இராமனின் ஆணையினால்; சலியாத நெடுங்கடல் தான் எனலாய் - அசையாது ஒலியடங்கிய பெரிய கடல் என்னும் படியாக; ஒலியாது உறு சேனையை உற்று விண் கிழிய ஆர்த்தனர் - ஆர்ப்பரவஞ் செய்யாது பொருந்தி இருந்த அரக்கர் சேனையை அடைந்து வான் முகடு கிழியும் படியாகப் பேராரவாரம் செய்தனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the mighty Irākavaṉ had commanded, upon the army
  2. that stood soundless, like a vast ocean that never stirs,
  3. they who never once grow weary came
  4. and roared so that the sky was torn.

What the poem says

The monkeys, who never tire, carry out Irāmaṉ's order. They close in on the silent rākṣasa army, as still as a calm ocean, and raise a roar so loud that it seems to rip the sky apart, aiming to disrupt the sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valiyāṉa irākavaṉ vāymoḻiyāl
caliyāta neṭuṅ kaṭaltāṉ eṉalāy
oliyātu uṟu cēṉaiyai uṟṟu oru nāḷ
meliyātavar ārttaṉar viṇ kiḻiya.