கம்பராமாயணம் 9008 · யுத்த 26.24

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின்னும் படை வீசினர் வெம்படைமேல்
பன்னும் கவிசேனை படிந்து உளதால்
துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனவாய்.

பொருள் · Meaning in Tamil

துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து - (பலரும்) நெருங்கிச் சென்று படியும் துறைகளை உடைய நீர்நிறைந்த தடாகத்தின் மேல்; அன்னங்கள் படிந்தனவாம் எனலாம் - அன்னப் பறவைகள் தொடர்ந்து படிந்தன என்னும்படி; மின்னும் படை வீசலின் வெம்படை மேல் - ஒளிவீசும் படைக்கலங்களை வீசலினால் (அவ்) வரக்கர்களது கொடுமைமிக்க மிக்க சேனையின் மேல்; பன்னும் கவிசேனை படிந்துளதால் - (வீரத்தால்) பாராட்டி உரைக்கப்படும் வானர சேனை மேற்சென்று தாக்கியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the cruel army flashed its gleaming weapons,
  2. the celebrated monkey host settled upon it;
  3. one might say it was like swans alighting one after another
  4. on a brimming pool with crowded bathing steps.

What the poem says

The rākṣasa army glitters with flashing weapons like the shining water of a full tank. The monkey troops, praised for their valour, descend on it like flocks of swans settling one after another onto a busy pool.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉṉum paṭai vīcaliṉ vem paṭaimēl
paṉṉum kavi cēṉai paṭintuḷatāl
tuṉṉum tuṟai nīr niṟai vāvi toṭarntu
aṉṉaṅkaḷ paṭintaṉavām eṉalām.