கம்பராமாயணம் 9011 · யுத்த 26.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வென்றிச் சிலை வீரனை வீடணன் 'நீ
நின்று இக்கடை தாழுதல் நீதியதோ?
சென்று இக்கடி வேள்வி சிதைத்திலையேல்
என்று இக்கடல் வெல்லுதும் யாம்? 'எனலும்
பொருள் · Meaning in Tamil
வீடணன் வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க வில்வீரனாகிய இலக்குவனை (நோக்கி); நீ இக்கடை நின்று தாழுதல் நீதியதோ? - நீ இவ்விடத்து (இந்திரசித்தன் வேள்வியைச் சிதைக்காது) நின்று காலந்தாழ்த்துதல் முறையாகுமா? இக்கடி வேள்வி சென்று சிதைத்திலையேல் - இந்தக் காவல் மிக்க வேள்வியை மேற்சென்று சிதைத்து அழிக்காமல் விடுவாயாயின்; இக்கடல் யாம் என்று வெல்குதும்? எனலும் - (அரக்கர் சேனையாகிய) இக்கடலை நாம் எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vīṭaṇaṉ said to the hero with the victorious bow, 'Is it right
- for you to stand here at the edge and delay?
- If you do not go and wreck this guarded sacrifice,
- when shall we ever conquer this ocean?' And when he said this,
What the poem says
Vīṭaṇaṉ urges Ilakkuvaṉ not to linger fighting on the fringes. Unless he goes straight in and breaks up the heavily guarded sacrifice, they will never overcome this sea of rākṣasas. The verse runs on into the next.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟic cilai vīraṉai vīṭaṇaṉ 'nī
niṉṟu ik kaṭai tāḻutal nītiyatō?
ceṉṟu ikkaṭi vēḷvi citaittilaiyēl
eṉṟu ik kaṭal velkutum yām? 'eṉalum