கம்பராமாயணம் 9013 · யுத்த 26.29

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல்லார்படை நின்றது; பல் அணியாய்
பல்லார்படை நின்றது; பல் பிறைவெண்
பல்லார்படை நின்றது; பல்லியமும்
பல்லார்படை நின்றது பல்படையே.

பொருள் · Meaning in Tamil

பல்படையே பல்லார் படை நின்றது - பலவகைப்பட்ட (அரக்கர்) சேனைகளுள் (வீரர்) பலராற் செலுத்தப்படும் தேர்ப்படை நின்றது; பல்அணியால் பல் ஆர் படை நின்றது - பல வரிசையால் பொருந்திய குதிரைப் படை நின்றது; பல்பிறை வெண் பல்லார் படை நின்றது - பலபிறை போலும் வெண்மையான (கோரைப்) பற்களை உடைய அரக்கர் சேனையாகிய காலாட் படை நின்றது; பல்லியம் உம்பல் ஆர் படை நின்றது - பல வாத்தியங்களுடனே யானைகள் நிரம்பிய படை நின்றது

இந்திரசித்தின் நால்வகைப் படைகளும் அவ்வேள்விக் களத்தைக் காத்து நின்றமை கூறப்பெற்றது. முதலடியில் பல்லார் படை என்றது தேர்ப்படையை. இரண்டாம் அடியில் வரும் ‘பல்லார் படை' என்றது, ‘பல்லணி' எனக் குறித்தமையால் குதிரைப் படையாயிற்று. மூன்றாம் அடியில் ‘பிறை வெண் பல்லார்' எனக் குறித்தமையால் காலாட் படையாயிற்று. நான்காம் அடியில் ‘உம்பல் ஆர்படை' என்றமையால் யானைப்படை கூறியதாயிற்று. இங்ஙனம் நால்வகைப் படையும் காத்து நின்ற களத்தில் இலக்குவன் போராற்றப் புறப்பட்டான் என்க. பல்அணி - பலவரிசை. இச்செய்யுள் ‘யமகம்' என்னும் சொல்லணியும், சொற்பொருட்பின்வரு நிலையணியும் தழுவி அமைந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Among the many forces stood the force driven by many, the chariots; in many ranks
  2. stood the force of many horses; the force of those with many white teeth
  3. like crescent moons stood there, the foot soldiers; and with many instruments
  4. stood the force filled with elephants, of all those many forces.

What the poem says

The poet lists the four arms of Intiracittaṉ's army guarding the sacrifice: chariots, cavalry in many ranks, foot soldiers with crescent-white fangs, and elephants with their many instruments. The verse is a showpiece of yamakam, a figure in which the same sound sequence, here pal-l-ār paṭai ('many... force'), recurs in every line with a different meaning each time. An English rendering can only hint at the wordplay.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pallār paṭai niṉṟatu; pal aṇiyāl
pal ār paṭai niṉṟatu; pal piṟai veṇ
pallār paṭai niṉṟatu; palliyamum
pal ār paṭai niṉṟatu pal paṭaiyē.