கம்பராமாயணம் 9014 · யுத்த 26.30

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக் காலை இலக்குவன் அப் படையுள்
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் வரக்கர் தம் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தென்புலமே.

பொருள் · Meaning in Tamil

அக்காலை இலக்குவன் அப்படையுள் புக்கான் - அப்பொழுது இலக்குவன் அந்த (அரக்கர்) சேனையுட் புகுந்தான்; அயில் அம்பு பொழிந்தனனால் - கூரிய முனையினை உடைய அம்புகளை (மழைபோல்) மிகுதியாகச் சொரிந்தான்; உக்கார் அவ் அரக்கர்தம் ஊர் ஒழிய - (அதனால் உடம்பு) சிதைந்தொழிந்தவர்களாகிய அவ்வரக்கர்கள் தமது ஊராகிய இலங்கையை விட்டு; நமனார் உறை தென்புலமே புக்கார் - இயமன் உறையும் தென் திசைக் கண்ணதாகிய உலகினை அடைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment Ilakkuvaṉ entered that army
  2. and rained down sharp-pointed arrows;
  3. those rākṣasas fell, and leaving their own city
  4. they entered the southern land where Yama dwells.

What the poem says

Ilakkuvaṉ plunges into the enemy ranks and showers them with arrows. The rākṣasas who fall leave their city of Ilaṅkai behind for good and go to the southern realm of Yama, god of death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kālai ilakkuvaṉ ap paṭaiyuḷ
pukkāṉ ayil ampu poḻintaṉaṉāl;
ukkār av arakkartam ūr oḻiya
pukkār namaṉār uṟai teṉ pulamē.