கம்பராமாயணம் 9015 · யுத்த 26.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேறா மதமால் கரிதேர் பரிமா - தெளியாத மதச் செருக்குடைய பெரிய யானை தேர் குதிரை ஆகிய சேனைகள்; நூறாயிர கோடியின் நூழில் பட - நூறாயிரங்கோடி என்னும் தொகையினவாய்க் கொன்று குவிக்கப்படவும்; சேறு ஆர் குருதிக் கடலில் திடராய்க் - சேறாகப் பொருந்திய இரத்தக் கடலிலே (இடையிடையே அமைந்த) தீவினைப் போன்று; கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் - கூறுபட்டு விழவும், (அரக்கர் சேனையின் உயிரைப் போக்கினான் (இலக்குவன்)
கடலில் திடர் என்றது, கடலின் இடையே காணப்படும் சிறிய தீவுகளை, ‘திடலிடைச் செய்த கோயில் திருவிராமேச் சுரத்தை’ (4-6153) என்பது அப்பர் தேவாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great elephants in unclearing rut, chariots and horses,
- a hundred thousand crores of them, were slaughtered in heaps,
- and, like islands in a sea of blood thick as mud,
- they fell cut to pieces as he cut short their lives.
What the poem says
Ilakkuvaṉ slaughters huge numbers of maddened elephants, chariots and horses. Their hacked-up bodies lie piled in the sea of muddy blood like small islands (tiṭar) in the ocean. The commentary cites a line of Appar's Tēvāram using the same word for an island.