கம்பராமாயணம் 9016 · யுத்த 26.32

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாமக் கரிதான் அழி வார்குழியின்
தீ மொய்த்த அரக்கர்கள் செம்மயிரின்
தாமத் தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்ப்ப உலப்பு இலவால்.

பொருள் · Meaning in Tamil

வாமக் கரிதான் அழிவார் குழி - அழகிய யானையின் கால்களால் மிதிக்கப்பட்டுச் சிதைந்த (தரையிடத்தே உண்டாகிய) நீண்ட குழியிடத்தே; வன் தீ மொய்த்த செம்மயிரின் - வலிய தீச்சுடர்க் கற்றைகள் நெருங்கினாற் போன்ற செந்நிறமயிரினைக் கொண்ட; அரக்கர்கள் தாமத் தலைஉக்க - அரக்கருடைய மாலையணிந்த தலைகள் சிதறி விழுந்தவை; தழங்கு எரியின் ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் - ஒளி விட்டொழியும் யாக குண்டத்தின் தீயை ஒப்பன எண்ணில்லாதன உளவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the long pits trampled out by the handsome elephants,
  2. the garlanded heads of rākṣasas, with red hair
  3. thick as fierce flames, fell scattered,
  4. countless, like the roaring fires of the sacrifice.

What the poem says

The huge elephants' feet have pounded the ground into long pits. Into these fall the severed, garlanded heads of the rākṣasas with their flame-red hair. The poet sees each one as a blazing sacrificial fire in its pit, an ironic echo of Intiracittaṉ's own rite.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāmak karitāṉ aḻi vār kuḻi vaṉ
tī moytta arakkarkaḷ cem mayiriṉ
tāmat talai ukka taḻaṅku eriyiṉ
ōmattai nikartta ulappu ilavāl.