கம்பராமாயணம் 9019 · யுத்த 26.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1படுமாரி நெடுங் கணை பாய்தலினால்
விடுமாறு உதிரம் புனல் வீழ்வனவால்
தடுமாறு நெடுங் கொடி தாழ்கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால்.
பொருள் · Meaning in Tamil
படுமாரி நெடுங்கணை பாய்தலினால் - பெய்கின்ற மழையினைப் போன்று நீண்ட அம்புகள் (உடம்பிற்) பாய்தலினால்; விடும் உதிரப் புனல் ஆறும் வீழ்வனவால் - வெளிப்பட்டுப் பெருகிய குருதி நீர் ஆற்றினையொத்து (ச்சென்று கடலில்) வீழ்வனவாயின; தடுமாறு நெடுங்கொடி - தாழ் கடல்வாய் - (அரக்கர் சேனையினின்றும்) தளர்ந்து வீழும் நீண்ட கொடிகள் ஆழமான கடலிலே; நெடுமா முகில் வீழ்வ நிகர்த்தனவால் - நீண்ட பெரிய மேகங்கள் (படிந்து) வீழ்வனவற்றை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the long arrows struck like pouring rain,
- the streams of blood they released flowed down like rivers;
- and the tall banners, reeling into the deep sea,
- were like long, great clouds falling.
What the poem says
Ilakkuvaṉ's arrows fall like rain, and the blood they release runs off like rivers into the sea. The rākṣasas' long banners, toppling into that sea of blood, look like great clouds sinking into the ocean.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭu māri neṭuṅ kaṇai pāytaliṉāl
viṭum āṟu utirap puṉal vīḻvaṉavāl
taṭumāṟu neṭuṅ koṭi tāḻ kaṭalvāy
neṭu mā mukil vīḻva nikarttaṉavāl.