கம்பராமாயணம் 9023 · யுத்த 26.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாயில் கனல் வெங்கடு வாளி இனம்
பாய பருமம் குலம் வேவனவால்
வேய் உற்ற நெடுங்கிரி மீவெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சினக் கரியே.
பொருள் · Meaning in Tamil
வாயில் கனல் வெங்கடு வாளி இனம் பாய - முனையின் கண்ணே தீயினையும், கொடிய நஞ்சினையும் கொண்ட அம்பின் தொகுதிகள் பாய்ந்து தைத்தலால்; பருமக்குலம் வேவனவால் சினக்கரியே - தம் மேலுள்ள கழுத்து மெத்தை முதலியவற்றின் தொகுதிகள் எரிந்து வேகும் நிலையிலுள்ளனவாகிய வெகுளி மிக்க யானைகள்; வேய் உற்ற நெடுங்கிரி மீ - மூங்கில் அடர்ந்துள்ள நெடிய மலைகள் மீது; வெயில் ஆம் தீ உற்றன ஒத்த - வெவ்விய நெருப்புப் பற்றி எரிவனவற்றை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As swarms of fierce, poisoned arrows with fire at their tips struck them,
- their harness and trappings burned;
- and the angry elephants looked like tall hills dense with bamboo
- caught by fire hot as the sun.
What the poem says
Ilakkuvaṉ's arrows carry fire and poison at their tips. The padded harness and trappings of the angry war elephants catch fire, and the burning beasts look like tall bamboo-covered hills set ablaze.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāyil kaṉal veṅ kaṭu vāḷi iṉam
pāya parumak kulam vēvaṉavāl
vēy uṟṟa neṭuṅ kiri mī veyil ām
tī uṟṟaṉa otta ciṉak kariyē.