கம்பராமாயணம் 9030 · யுத்த 26.46

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாறுகொள் மதகரி சுமந்து தாமரை
சீறிய முகத் தலை உருட்டி செந்நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
ஆறுகள் எழும் கனல் அவியச் சென்றவால்.

பொருள் · Meaning in Tamil

செந்நிறத்து ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து - செந்நிறத்தினை உடைய (வடுப்பட்ட) புண்களிலிருந்து சுரந்து பெருகிய குருதியினாலாகிய; ஓங்கு அலை யாறுகள் - உயர்ந்து எழும் அலைகளை உடைய ஆறுகள்; தாறு கொள் மதகரி சுமந்து - அங்குசத்தாற் செலுத்தப் படுதலை உடைய மதயானைகளைச் சுமந்துகொண்டு; தாமரை சீறிய முகத்தலை உருட்டி - செந்தாமரைப் பூவினைச் சினந்த (செங்கண்களை உடைய) முகத்தோடு பொருந்திய (வீரர்களின் தலைகளை உருட்டி; எழுங்கனல் அவியச் சென்றவால் - (ஓமகுண்டத்தில்) எழுந்து எரியும் வேள்வித்தீ அவியும்படி சென்று பாய்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Carrying rutting elephants driven by goads,
  2. rolling heads whose faces put the red lotus to scorn,
  3. rivers of great blood poured from red wounds, with towering waves,
  4. flowed on so that the rising fire was quenched.

What the poem says

Rivers of blood from the wounds of the slain, so high they carry along dead elephants and roll the heads of red-eyed warriors, surge into the sacrificial pit and put out Intiracittaṉ's fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṟu koḷ matakari cumantu tāmarai
cīṟiya mukat talai uruṭṭi cen niṟattu
ūṟukaḷ corinta pēr utirattu ōṅku alai
yāṟukaḷ eḻuṅ kaṉal aviyac ceṉṟavāl.