கம்பராமாயணம் 9031 · யுத்த 26.47

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெரிகணை விசும்பிடைத் துணித்த செம்மயிர்
வரிகழல் அரக்கர்தம் தடக்கை வாளொடும்
உரும் என விழுதலின் அனலிக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால்.

பொருள் · Meaning in Tamil

தெரிகணை விசும்பிடைச் சுமந்து - (இலக்குவன்) ஆராய்ந்து எய்த அம்புகளால் விசும்பின் கண்ணே சுமக்கப்பெற்று; செம்மயிர் வரிகழல் அரக்கர் தம் தடக்கை - சிவந்த மயிரினையும் வரிந்து கட்டப்பெற்ற வீரக்கழலையுடைய அரக்கர்களுடைய பெரிய கைகள்; வாளொடும் உரும் என விழுதலின் - (தாம் பிடித்துள்ள) வாட்படையுடனே இடிபோன்று (நிலத்தில் வீழ்தலால்; அனலிக்கு ஓக்கிய எருமைகள் மறிந்தன, மறியும், ஈர்ந்தவால் - தீக்கடவுளுக்கென (யாகத்தில்) உரிமை செய்து வைக்கப்பட்ட எருமைகள் (வெட்டுண்டு) இறந்தன. ஆடுகளும் (அவ்வாறே) பிளக்கப்பட்டு இறந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Borne through the sky by his well-aimed arrows, the great hands
  2. of red-haired rākṣasas with strapped anklets,
  3. falling with their swords like thunderbolts,
  4. felled the buffaloes set apart for the fire god, and split the goats as well.

What the poem says

Ilakkuvaṉ's arrows carry off the hands of red-haired rākṣasas, still gripping their swords, and send them crashing down like thunderbolts. They strike and kill the buffaloes and goats reserved as offerings to Agni, the fire god, ruining yet another part of the rite.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teri kaṇai vicumpiṭaic cumantu cem mayir
vari kaḻal arakkartam taṭak kai vāḷoṭum
urum eṉa viḻutaliṉ aṉalikku ōkkiya
erumaikaḷ maṟintaṉa; maṟiyum īrntavāl.