கம்பராமாயணம் 9032 · யுத்த 26.48

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அம்கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம்கடம் கழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர்குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர்பகழி அஞ்சினார்.

பொருள் · Meaning in Tamil

அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின் நின்று - அழகிய கன்னங்கள் (கிழியப்பெற்று) வழிகின்ற குருதியுடன் பெரிய அருவி வீழ்கின்ற குன்றினைப் போல (உயிர் எஞ்சி) நின்று; அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் - (தம்) அழகிய (திண்மையான) உடம்பு கிழியப்பெறாது (தோற்றழிவதால்) நெஞ்சழிந்த அரக்க வீரர்கள்; தொடர் பகழி அஞ்சினார் - (இலக்குவனது வில்லினின்றும்) தொடர்ந்து வரும் அம்புகளுக்கு அஞ்சியவர்களாய்; அங்கு அடங்கலும் படர்குருதி ஆழியின் அங்கு அடங்கினர் - போர்க்களமாகிய அவ்விடத்தில் முழுதும் பரவிய குருதிக் கடலினுள்ளே அடங்கி மறைந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing like hills with great waterfalls, blood streaming from their fine cheeks,
  2. the warriors whose fine bodies were not yet torn but whose courage was broken,
  3. fearing the arrows that came one after another,
  4. hid themselves there in the sea of blood that spread over all that place.

What the poem says

Some rākṣasa warriors are still alive, their cheeks pouring blood like hills with waterfalls, unhurt in body but broken in spirit. Terrified of Ilakkuvaṉ's relentless arrows, they hide themselves in the sea of blood covering the field. Again the verse plays on the repeated sound am kaṭam / aṅku aṭaṅkal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1am kaṭam kaḻinta pēr aruvik kuṉṟiṉniṉṟu
am kaṭam kiḻintilar aḻinta āṭavar
aṅku aṭaṅkalum paṭar kuruti āḻiyiṉ
aṅku aṭaṅkiṉar toṭar pakaḻi añciṉār.