கம்பராமாயணம் 9033 · யுத்த 26.49

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால் தலத்தொடு துணிந்து அழிய காய்கதிர்க்
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினார் துளங்கு மெய்யினார்
நாறு அலைக் குடரினர் பலரும் நண்ணினார்.

பொருள் · Meaning in Tamil

கால் தலத்தொடு துணிந்து அழிய - கால்கள் தரையொடு துணிக்கப்பட்டுச் சிதைந்து வீழ; காய்கதிர்க் கோல் தலைத் தலை உற - (இலக்குவன் ஏவிய) வெதுப்பும் சுடரினையுடைய அம்புகள் மேன்மேலும் வந்து பொருந்த; மறுக்கம் கூடினார் பலரும் துளங்கு மெய்யினார் - கலக்கமுற்றவர்களாகிய அரக்கர்கள் பலரும் நடுங்கிய உடம்பினராய்; நாறு அலைக்குடலினர் - (வயிற்றின் புறத்தே) வெளிப்பட்டு அலைதலை உடைய குடரினை உடையராய்; வேல் தலத்து ஊன்றினார் நண்ணினார் - (தம் கையிற் கொண்ட) வேற் படையை (ஊன்று கோலாகக் கொண்டு) ஊன்றியவர்களாய் (வருந்தி) அடைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their legs cut through at the ground and ruined, as burning, blazing
  2. arrows struck them again and again, those thrown into turmoil,
  3. leaning on spears planted in the ground, their bodies trembling,
  4. many of them came on with stinking entrails dangling.

What the poem says

Many rākṣasas, their legs severed and arrows striking them again and again, stagger forward in confusion. Their bodies shaking and their entrails spilling out, they prop themselves on their spears and still struggle toward the fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl talattoṭu tuṇintu aḻiya kāy katirk
kōl talaittalai uṟa maṟukkam kūṭiṉār
vēl talattu ūṉṟiṉār tuḷaṅku meyyiṉār
nāṟu alaik kuṭaliṉ palarum naṇṇiṉār.