கம்பராமாயணம் 9035 · யுத்த 26.51

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூடிய நெய்யொடு நறவு முற்றிய
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பலபடு குழாம் குழாங்களாய்
ஆடின அறுகுறை அறுக்கும் ஆக்கைகள்.

பொருள் · Meaning in Tamil

நெய்யொடு நறவு முற்றிய மூடிய சாடிகள் - நெய்யுடன் தேன் நிறைந்தனவாய் மூடப்பட்டுள்ள சாடிகள்; தகர்ந்து பொரியொடு தள்ளுற - உடைந்து பொரிகளோடு சிதைவுற்றுத் தள்ளப்பட; அறுகுறை அறுக்கும் ஆக்கைகள் - தலையறுபட்ட குறையுடலாகிய கவந்தங்கள்; பல கோடிகள் படும் குழாம் குழாங்களாய் ஆடின - பல கோடியினைக் கொண்ட கூட்டம் கூட்டமாக ஆடின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sealed jars full of ghee and honey
  2. were smashed and tumbled about with the parched grain,
  3. headless trunks, the bodies left by cutting,
  4. danced in throngs upon throngs, many crores of them.

What the poem says

The sealed jars of ghee and honey and the parched rice prepared for the oblations are smashed and scattered. Among them dance crowds of headless trunks (kavantam), a stock image of carnage in Tamil war poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūṭiya neyyoṭu naṟavu muṟṟiya
cāṭikaḷ poriyoṭu takarntu taḷḷuṟa
kōṭikaḷ pala paṭum kuḻām kuḻāṅkaḷāy
āṭiṉa aṟuk kuṟai aṟukkum ākkaikaḷ.