கம்பராமாயணம் 9036 · யுத்த 26.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல் என - காற்றினைப் போலவும், நஞ்சினைப் போலவும், ஆடை நெய்வோர் (பாலிடையே செலுத்தும்) நூலினைப் போலவும்; உடற்பொறை தொடர்ந்த நோய் என - உடலாகிய பாரத்தைப் பிணித்துள்ள நோயினைப் போலவும்; பால்உறு பிரை என, பல்முறை கலந்து - பாலிற் பொருந்திய பிரையினைப் போலவும் (இலக்குவன்) பலமுறை உட்புகுந்து; வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான் - வேலேந்திய அரக்கர் சேனையை வெட்டி வீழ்த்தினான்.
கால் - காற்று, கடு - நஞ்சு, கலிங்கம் - ஆடை. கம்மியர் - ஆடை நெய்வோராகிய காருகர். நூல் - பாவிடையே செலுத்தப்பெறும் ஊடை நூல். பிரை - பால் தயிராதற் பொருட்டுத் தெளிக்கப்படும் மோர்த் துளி. கலத்தல் - எங்கும் சென்று பொருந்துதல். ‘விரைந்து செல்லும் தொழில் பற்றிக் காற்றும், உயிரைப் போக்கும் திறம் பற்றிக் கடுவும், உள்ளே புகுந்து கரந்து பரவுதல் பற்றிக் கம்மியர் நூலும், அகலாது தொடர்ந்து வருத்துதல் பற்றி நோயும், பகைவர் சேனையை உருவறச் சிதைத்தல் பற்றிப் பாலுறு பிரையும் இலக்குவனுக்கு உவமையாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the wind, like poison, like the weavers' thread
- in cloth, like a disease that clings to the burden of the body,
- like the starter culture in milk, he mingled in again and again
- and cut down and felled the spear-bearing army.
What the poem says
Ilakkuvaṉ moves through the rākṣasa army again and again. The poet heaps up five comparisons, each for a different quality: wind for his speed, poison for his deadliness, the weaver's weft thread for the way he slips in and out of the ranks, a chronic disease for his relentlessness, and the drop of buttermilk that curdles milk for the way he transforms the whole army into something unrecognisable.