கம்பராமாயணம் 9037 · யுத்த 26.53

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண் அகல் மண்தலம் மறி கடல் அன்ன மாப்படை - இடம் விரிந்த மண்ணுலகில் (அலைகள் மறிந்து சூழும் கடற் பரப்பினை ஒத்த (தனது) பெருஞ்சேனையானது விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் - மாறுபட்டு வீசும் பெருங்காற்று மோதுதலால் (மரங்கள் ஒடிந்து சின்னபின்னப்பட்டுக் கிடக்கும்; தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே - சோலையினை ஒத்துச் சிதைந்து கிடந்த தன்மையினை; திசைதொறும் நோக்கி கண்டனன் - (இந்திரசித்து) எல்லாத் திசைகளிலும் உற்று நோக்கிக் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looked in every direction and saw
  2. how his great army, like the rolling sea that circles the wide earth,
  3. lay like a grove struck by a raging wind,
  4. its trees snapped and scattered.

What the poem says

Intiracittaṉ, interrupted at his rite, looks round in every direction. His army, once as vast as the ocean that rings the earth, lies wrecked like a grove flattened by a violent storm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ ticaitoṟum nōkki kaṇ akal
maṇtalam maṟi kaṭal aṉṉa māp paṭai
viṇṭu eṟi kāl pora maṟintu vīṟṟuṟum
taṇṭalai ām eṉak kiṭanta taṉmaiyē.