கம்பராமாயணம் 9038 · யுத்த 26.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மிடலின் வெங் கடகரிப் பிணத்தின் விண்தொடும்
திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய
உடலும் வன் தலைகளும் உதிர்ந்து ஓங்கு அலைக்
கடலும் அல்லால் இடை ஒன்றும் கண்டிலன்.
பொருள் · Meaning in Tamil
மிடலின் வெங் கட கரிப்பிணத்தின் விண் தொடும் திடலும் - வன்மை மிக்க கொடிய மதமுடைய யானைகளின் பிணங்களாலாகிய வானத்தை அளாவிய மேட்டுப்பகுதியும்; வெம்புரவியும் தேரும் சிந்திய உடலும், வன்தலைகளும் - வெவ்விய குதிரைகளும் தேர்களும் (வீரர்களின்) சிதறுண்ட உடம்புகளும், தலைகளும்; ஓங்கு அலை உதிரத்துக் கடலும் - ஓங்கி மேலெழும் அலைகளை உடைய குருதிக் கடலும்; அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் - ஆகிய இவற்றை அன்றி (தன் சேனையில் அழிவின்றி உள்ளனவாக) அப்போர்க் களத்தினிடையே வேறொன்றையுங் காணாதவனாயினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mounds of the corpses of mighty, fierce, rutting elephants that touched the sky,
- fierce horses and chariots, scattered
- bodies and strong heads, and a sea of blood with towering waves:
- besides these he saw nothing in between.
What the poem says
All Intiracittaṉ can see are sky-high heaps of dead elephants, dead horses and wrecked chariots, scattered bodies and heads, and a sea of blood with rising waves. Nothing of his army is left intact.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṭaliṉ veṅ kaṭa karip piṇattiṉ viṇ toṭum
tiṭalum vem puraviyum tērum cintiya
uṭalum vaṉ talaikaḷum utirattu ōṅku alaik
kaṭalum allātu iṭai oṉṟum kaṇṭilaṉ.