கம்பராமாயணம் 9039 · யுத்த 26.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோன்கழல் மாறு இல்போர் நூறு நூறாயிர கோடி அரக்கரை - வலிய வீரக்கழலினையும் மாறுதலில்லாத போராற்றலையும் உடைய நூறு நூறாயிரங் கோடி அரக்க வீரர்களை ஒருவன் வாட்கணை கூறுகூறு ஆக்கிய குவையும் - (இலக்குவன் என்னும்) ஒருவனுடைய கூரிய அம்புகள் துண்டந் துண்டமாகச் சிதைத்த பிணக்குவையினையும்; சோரியின் ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் - (அங்கு பெருகி ஓடிய) குருதி ஆற்றினையுமே அல்லாமல் வேறு முழுமையான உடம்பினை உடையார் யாரையும் (இந்திரசித்து அப்போர்க்களத்தில்) கண்டிலன்.
நோன் - வலிமை. வாள் - கூர்மை. சோரியின் ஆறு - இரத்த ஆறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A hundred times a hundred thousand crores of rākṣasas with strong anklets,
- unmatched in battle, cut to pieces and pieces by one man's sharp arrows:
- except for those heaps and the rivers of blood,
- he did not see a single whole body.
What the poem says
Countless rākṣasa champions have been cut to pieces by the arrows of one man, Ilakkuvaṉ. Intiracittaṉ sees only piles of fragments and rivers of blood; not one body on the field is still whole.