கம்பராமாயணம் 9043 · யுத்த 26.59

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் மலருடை ஆழி மாப்படை - ஆயிரம் தாமரை என்னும் அளவினைக் கொண்ட கடல் போன்ற பெரிய (அரக்கர்) சேனை; ‘ஏ’ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் - ‘ஏ' என்னும் அளவில் அழித்த (இலக்குவனது) வெற்றித்திறமும்; தூயவன் சிலை வலித் தொழிலும் துன்பமும் - தூயோனாகிய இலக்குவனது விற்றொழில் வன்மையும் (தான் தொடங்கியவேள்வி) முற்றுப் பெறாமையால் தான் அடைந்த) துன்பமும்; மேயின வெகுளியும் கிளர வெம்பினான் - (அதுபற்றிப்) பொருந்திய கோபமும் (தன் உள்ளத்திற்) பொங்கி எழ (இந்திரசித்து) மனம் வெதும்பினான்.

மலர் - தாமரை. இங்கு ஒரு பேரெண்ணைக் குறித்தது. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன பேரெண்களைக் குறிப்பனவாம். இதனைத் தொல்காப்பிய எழுத்ததிகார 393- ஆம் நூற்பாவிற் காணலாம். ‘ஏ' எனும் மாத்திரை. ‘ஏ' என்னும் கால அளவுக்குள் விரைவுக்குறிப்பு. இறுதல் - அழித்தல். கொற்றம் - வெற்றி. தூயவன் - இலக்குவன். வெம்பியவன் - இந்திரசித்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The victory that destroyed his great sea-like army, a thousand 'lotuses' strong,
  2. in the time it takes to say 'ē',
  3. the pure one's mighty work with the bow, his own grief,
  4. and the anger that took hold of him all welled up, and he seethed.

What the poem says

Intiracittaṉ burns inside as he takes in the disaster: an army numbered in 'a thousand lotuses', a huge counting unit like veḷḷam, wiped out in an instant, the time it takes to utter the syllable 'ē'. Ilakkuvaṉ's archery, his own grief at the ruined sacrifice and his rage all surge up together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram malaruṭai āḻi māp paṭai
'ē 'eṉum māttirattu iṟṟa koṟṟamum
tūyavaṉ cilai valit toḻilum tuṉpamum
mēyiṉa vekuḷiyum kiḷara vempiṉāṉ.