கம்பராமாயணம் 9044 · யுத்த 26.60

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மெய் குலைந்து இருநில மடந்தை விம்முற
செய் கொலைத் தொழிலையும் செய்கை தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டனர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

இருநில மடந்தை மெய் குலைந்து விம்முற - பெரிய நில மகளாகிய பூமிதேவியும் உடல் நடுங்கத் துன்புறும்படி; செய்கொலைத் தொழிலையும் - இலக்குவன் செய்யும் கொல்லுதல் தொழிலையும்; சென்ற தீயவர் மொய் குலத்து இறுதியும் - போர் மேற்சென்ற அரக்கர் குலத்தின் அழிவையும்; கண்டவர் முனிவர் கை குலைக்கின்றதும் - (போர்க்களத்தைக்) கண்ணுற்றவர்களாகிய முனிவர்கள் கை விதிர்த்தலையும்; கண்ணின் நோக்கினான் - (இந்திர சித்து நேரே கண்களாற் கண்டான்.

பொறையிற் சிறந்த பூமி தேவியும் அரக்கர்களின் மடிந்து வீழும் உடற்பொறை தாங்கலாற்றாது குலைந்தனள் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The slaughter that made the lady of the broad earth tremble in body and groan,
  2. the end of the crowded clan of evil ones who had gone to fight,
  3. and the sages who watched it
  4. shaking their hands: all this he saw with his own eyes.

What the poem says

Intiracittaṉ sees the carnage Ilakkuvaṉ has wrought, so great that even the Earth goddess, famed for her patience, trembles under the weight of the dead. He sees his clan destroyed and the sages watching, shaking their hands in amazement.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mey kulaintu iru nila maṭantai vimmuṟa
cey kolait toḻilaiyum ceṉṟa tīyavar
moy kulattu iṟutiyum muṉivar kaṇṭavar
kai kulaikkiṉṟatum kaṇṇiṉ nōkkiṉāṉ.