கம்பராமாயணம் 9046 · யுத்த 26.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின் - இருபத்தைந்து வெள்ளம் என்னும் தொகையினதாகி விரிந்து பரவிய சேனையில்; உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஓயுமால் - எஞ்சி உள்ளது பத்து அக்குரோணி சேனை (அதுவும்) தளர்ந்து ஒழியும்; எள்ள அருவேள்வி நின்று இனிது இயற்றுதல் பிள்ளைமை - இகழ்தற்கரிய யாகத்தினை இடம் பெயராது நின்று இனிது இயற்றுதல் என்பது சிறு பிள்ளைத்தனம்; அனையது சிதைந்து பேர்ந்ததால் - அந்த வேள்வி வேரறச் சிதைந்து போயிற்று.
வெள்ளம் என்பது பேரெண். கோடி × கோடி × கோடி × கோடி × கோடி - என 57 ஆம் தானத்தது வெள்ளம் என்பர். அக்குரோணி என்பது 21870 தேர்களும், 21870 யானைகளும், 65610 குதிரைகளும், 109350 காலாட்படை வீரர்களும் ஆகிய பெருஞ்சேனை என்பர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Of the army that spread to five times five veḷḷam,
- what remains is ten akkuroṇi, and that too is failing;
- to stand here calmly and carry out this weighty sacrifice
- is childishness; that rite has been shattered and is gone.'
What the poem says
Intiracittaṉ counts his losses. Of an army of twenty-five veḷḷam only ten akkuroṇi remain, and they are failing. It would be childish to carry on with the sacrifice; it has been wrecked. The commentary explains the huge units: a veḷḷam is a number of fifty-seven places, and an akkuroṇi is a fixed formation of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses and 109,350 foot soldiers.