கம்பராமாயணம் 9049 · யுத்த 26.65

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'மந்திர வேள்விபோய் மடிந்ததாம் " எனச்
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல்
அந்தரத்து அமரர்தாம் "மனிதற்கு ஆற்றலன்
இந்திரற்கே இவன் வலி " என்று ஏசவோ?

பொருள் · Meaning in Tamil

மந்திர வேள்வி போய் மடிந்ததாம் எனச் - மந்திரத்துடன் இயற்றப்படும் யாகம் சென்று அழிந்ததாம் என்று; சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் - மனதிலே நினைந்து நான் வருந்தும் சிறுமைத்தன்மை; அந்தரத்து அமரரும் - வானத்திலுள்ள தேவர்களும்; ‘மனிதர்க்கு ஆற்றலன்; இந்திரர்க்கே இவன் வலி!’ என்று ஏசவோ? - (இவ்விந்திரசித்து) ‘மனிதன் ஒருவனுக்கு (எதிர் நிற்க) ஆற்றாதவனாயினான், இவனது வலிமை இந்திரனை வெற்றி கொள்வதற்கு மட்டுமே' என (என்னைக் குறித்துப்) பழித்துரைத்தற்காகவோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This pettiness of mine, grieving as I think in my mind,
  2. "The mantra sacrifice is gone and dead,"
  3. is it so that the immortals in the sky may mock me, saying,
  4. "He is no match for men; his strength is only good against Indras"?'

What the poem says

Intiracittaṉ scolds himself for grieving over the ruined sacrifice. If he sulks, the gods watching from the sky will sneer that the conqueror of Indra cannot stand up to a mere man, and that his famous strength works only against gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'mantira vēḷvi pōy maṭintatām" eṉac
cintaiyiṉ niṉaintu nāṉ varuntum ciṟṟiyal
antarattu amararum "maṉitarkku āṟṟalaṉ
intirarkkē ivaṉ vali" eṉṟu ēcavō?