கம்பராமாயணம் 9050 · யுத்த 26.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அவன் பகர்கின்ற எல்லையின் இருங்
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின;
சென்றன பெரும்படை இரிந்து சிந்தின.
பொருள் · Meaning in Tamil
என்று அவன் பகர்கின்ற எல்லை - என்று அவ் இந்திரசித்து (தனக்குள்) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதில்; குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும் - குன்றுகளோடு மரங்களையும் பிணத்தின் தொகுதிகளையும்; பொன்றின கரிகளும் கவிகள் வல்விசை போக்கின - இறந்த யானைகளையும் குரங்குகள் வலிய விசையினோடு (அரக்கர் மேல்) வாரி வீசின; சென்றன பெரும் படை இரிந்து சிந்தின - (இந்திரசித்தனுடன் சென்றனவாகிய பெரும் சேனைகள் நிலைகெட்டுச் சிதறின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While he was saying this, with mighty force
- the monkeys hurled hills and trees, heaps of corpses
- and dead elephants;
- and the great army that had come with him broke and scattered.
What the poem says
As Intiracittaṉ talks to himself, the monkeys fling hills, trees, piles of corpses and even dead elephants at the rākṣasas. The great army that had come with him breaks and scatters.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ pakarkiṉṟa ellai val vicai
kuṉṟoṭu maraṅkaḷum piṇattiṉ kūṭṭamum
poṉṟiṉa karikaḷum kavikaḷ pōkkiṉa;
ceṉṟaṉa perum paṭai irintu cintiṉa.