கம்பராமாயணம் 9052 · யுத்த 26.68

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய
கார்வரை அரக்கர் வெம் கடலின் வீழ்ந்தன
போர்நெடுங் கால்பொர பொழியும் மாமழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய.

பொருள் · Meaning in Tamil

வீரன் வெங்கணையொடும் - இலக்குவன் ஏவிய கொடிய அம்புகளோடு; கவிகள் வீசிய கார் வரை - வானரங்கள் வீசிய கரிய மலைகள்; அரக்கர் தம் கடலின் வீழ்ந்தன - அரக்கருடைய சேனையாகிய கடலில் வீழ்ந்தவை; போர் நெடுங் கால்பொர - பொருது அலைக்கும் நெடிய பெருங்காற்று மோதுதலால்; பொழியும் மாமழைத் தாரையும் - பொழிதலை உடைய கரிய மழை மேகங்களின் நீர்த்தாரையும், மேகமும் படிந்த தன்மைய - (அவற்றையுடைய) மேகங்களும் ஒருசேர (கருங்கடலில்) படிந்த தன்மையை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The dark hills the monkeys threw, together with the hero's fierce arrows,
  2. falling into the sea of rākṣasas,
  3. were like the streaming torrents of a great rain
  4. and the clouds themselves sinking down when a long, fierce wind assails them.

What the poem says

Ilakkuvaṉ's arrows and the dark boulders thrown by the monkeys fall together into the sea of rākṣasas. It looks as if a storm wind were driving both the rain and the dark clouds themselves down into the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīraṉ veṅ kaṇaiyoṭum kavikaḷ vīciya
kār varai arakkartam kaṭaliṉ vīḻntaṉa
pōr neṭuṅ kāl pora poḻiyum mā maḻait
tāraiyum mēkamum paṭinta taṉmaiya.