கம்பராமாயணம் 9062 · யுத்த 26.78

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"கொல்வென் " என்று, உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி, வந்து அருகு சார்ந்து, உன் சேனையை முழுதும் வீட்டி,
"வல்லையேல் வா வா " என்று விளிக்கின்றான்; வரிவில் நாணின்
ஒல் ஒலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ?

பொருள் · Meaning in Tamil

‘கொல்வென்’ என்று, உன்னைத் தானே குறித்து ஒரு சூளும் கொண்ட - ‘உன்னைக் கொல்வேன்' என்று தானே (முற்படக்) குறித்து ஒப்பற்ற வஞ்சினங் கூறிய; வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி - வில்லாளனாகிய இலக்குவன் நின் பக்கத்தே நெருங்கிச் சார்ந்து உன் சேனை முழுவதையும் கொன்று வீழ்த்தி; ‘வல்லை நீ பொருவாய்’ என்று விளிக்கின்றான் - ‘விரைவில் நீ வந்து போரிடுவாய்’ என்று உன்னை அழைக்கின்றான்; ஐய! வரிவில் நாணின் ஒல்லொலி - ஐயனே! (அவனது) வரிந்து கட்டப் பெற்ற வில் நாணினின்றும் எழுகின்ற ஒல்லென்னும் ஒலியானது; செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ? - நீ செய்து கொண்டிருக்கும் வேள்விக் கிரியைக்கு (மந்திர பூர்வமாகிய) ஓர் அங்கமாக அமைந்ததோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The bowman who of his own accord swore an oath, singling you out, "I will kill him,"
  2. has come up close, destroyed your whole army,
  3. and calls to you, "Come quickly and fight"; sir, is the twanging
  4. of his banded bowstring one of the parts of the oblation you are making?'

What the poem says

Aṉumaṉ points out that Ilakkuvaṉ, who has sworn to kill Intiracittaṉ, is right there, has wiped out his army and is challenging him to fight at once. With heavy irony he asks whether the twang of Ilakkuvaṉ's bowstring is part of the ritual chant of the sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kolveṉ" eṉṟu, uṉṉaittāṉē kuṟittu oru cūḷum koṇṭa
villi, vantu aruku cārntu, uṉ cēṉaiyai muḻutum vīṭṭi,
"vallai nī poruvāy" eṉṟu viḷikkiṉṟāṉ; vari vil nāṇiṉ
olloli, aiya! ceyyum ōmattukku uṟuppu oṉṟu āmō?