கம்பராமாயணம் 9063 · யுத்த 26.79

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்
தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும் காண நின்றார்; இனி இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ? ' என்றனன், தருமம் காப்பான்.

பொருள் · Meaning in Tamil

மூவகை உலகும் காக்கும் முதல்வன் தம்பி பூசல் - மூன்று வகை உலகங்களையும் இடர் நீக்கிப் பாதுகாக்கும் முதல்வனாகிய இராமனின் தம்பி இலக்குவனது போர்த் திறத்தை; தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார் - தேவர்களும், முனிவர்களும், மற்றும் பல திறப்பட்ட உலகங்களில் வாழ்வோர்; யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ? - யாவரும் காணுதற் பொருட்டு வந்து நின்றார்கள், இனிச் சிறிதும் தாமதிப்பது ஏனோ? சாவது சரதம் அன்றோ? என்றனன் தருமம் காப்பான் - இறப்பது உறுதி அன்றோ என்று கூறினான் அறத்தினைக் காப்பவனாகிய இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gods, the sages and those who dwell in worlds of every kind
  2. all stand waiting to watch the battle of the younger brother
  3. of the First One who guards the three worlds; why delay even a moment now?
  4. Is not your death certain?' said the guardian of dharma.

What the poem says

Aṉumaṉ ends his taunt. Gods, sages and beings from every world have gathered to watch Ilakkuvaṉ, brother of Irāmaṉ the protector of the three worlds, fight. There is no point in Intiracittaṉ hanging back, since his death is sure anyway. Aṉumaṉ is called the guardian of dharma (the commentary takes the phrase as referring to Irāmaṉ).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mūvakai ulakum kākkum mutalvaṉ tampi pūcal
tēvarkaḷ, muṉivar, maṟṟum tiṟattiṟattu ulakam cērntār,
yāvarum kāṇa niṉṟār; iṉi iṟai tāḻppatu eṉṉō?
cāvatu caratam aṉṟō?' eṉṟaṉaṉ, tarumam kāppāṉ.