கம்பராமாயணம் 9064 · யுத்த 26.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து - (அனுமன் கூறிய) அம்மொழிகளைக் கேட்டு நெருப்பெனப் பெருமூச்சு விட்டு; அலங்கல் பொன்தோள் மின் நகுபகுவாயூடு வெயில் உக - மாலை அணிந்த பொன்மயமான தன் தோள்களினின்றும் மின்னொளி சிதற, பிளந்த வாயினிடையே வெயில் வெளிப்பட்டு வீச; நகை போய் வீங்க - வெகுளிச் சிரிப்பு மிக்குத் தோன்ற; முன்னரே வந்து இம்மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே - என் முன்னே வந்து இம்மொழியினை ஆற்றல் காரணமாக மொழிந்தவாறோ? நீயிர் என்னை இகழ்ந்தது என்னதோ? என்று இனைய சொன்னான் - நீயிர் என்னை இகழ்ந்து கூறியது ஏனோ? என்று சொல்லிப் பின் வரும் மொழிகளைக் கூறினான் (இந்திரசித்து).
அனல் - நெருப்பு. உயிர்ப்பு - பெருமூச்சு, அலங்கல் - மாலை. பகுவாய் - பிளந்தவாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words he breathed out fire; from his garlanded golden shoulders lightning flashed,
- and through his gaping mouth, glittering, sunlight poured as his laughter swelled;
- 'You came before me and spoke these words, is it out of strength?
- Why is it you scorn me?' he said, and spoke these words.
What the poem says
Intiracittaṉ, provoked, breathes fire. Light flashes from his golden, garlanded shoulders and from his gaping mouth as he bursts into furious laughter. He demands to know how the monkeys dare insult him to his face, and goes on to answer.