கம்பராமாயணம் 9065 · யுத்த 26.81

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூண்ட போர்தோறும் பட்டு முடிந்தநீர், முறையின் தீர்ந்து
மீண்டபோது அதனை எல்லாம் மறத்திரோ? விளிதல் வேண்டி
'ஈண்டவா 'என்னா நின்றீர்; இத்தனை பேரும் பட்டு
மாண்டபோது, உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான?

பொருள் · Meaning in Tamil

மூண்ட போர் தோறும் பட்டு முடிந்தநீர் - மிக்கெழுந்த போர்கள் தோறும் (படைக்கலங்களால்) தாக்கப்பட்டு இறந்த நீங்கள்; முறையின் தீர்ந்து மீண்டபோது அதனை எல்லாம் மறத்திரோ? - (உயிர் போன விதிமுறையின் நீங்கி (உயிர் பெற்று) மீண்டு வந்த இப்பொழுது (முன்னுற்ற) அத்துன்பங்களை எல்லாம் மறந்து விட்டீரோ? விளிதல் வேண்டி ‘ஈண்ட வா’ என்னா நின்றீர் - இறத்தலை விரும்பி, ‘அணுக வருவாயாக’ என்று (என்னைப் போருக்கு) அழைக்கின்றீர்கள்; இத்தனை பேரும் இன்னம் மாண்ட போது - (நீங்கள்) இத்தனை பேரும் (என் அம்புகளால்) தாக்கப்பட்டு இறந்தபொழுது; உயிர் தந்தீயும் மருந்துமான வைத்தனையோ - (அவர்களின்) உயிரை மீட்டுத் தருவதற்குரிய மருந்தினை நிறையைப் பெற்று வைத்துள்ளாயோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who were struck down and died in every battle that flared up, now that you have
  2. escaped death's rule and come back, have you forgotten all that? Longing to die,
  3. you keep saying "Come close"; when all of you
  4. die once more, have you kept a store of the medicine that gives back life?'

What the poem says

Intiracittaṉ reminds the monkeys that they were all killed in earlier battles and brought back to life only by the healing herbs Aṉumaṉ fetched. Have they forgotten? They are asking to die by calling him out. When they all die again, he sneers, has Aṉumaṉ saved more of that life-giving medicine?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūṇṭa pōrtōṟum paṭṭu muṭinta nīr, muṟaiyiṉ tīrntu
mīṇṭapōtu ataṉai ellām maṟattirō? viḷital vēṇṭi
'īṇṭa vā 'eṉṉāniṉṟīr; ittaṉai pērum iṉṉam
māṇṭapōtu, uyir tantīyum maruntu vaittaṉaiyō māṉa?