கம்பராமாயணம் 9066 · யுத்த 26.82

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக, ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்கின் வெள்ளம்
குலக்குலம் ஆக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர் தம்மோடு அமரரும் காண்பர் அன்றே.

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக - (என்னோடு போர் புரிய வருபவன்) இலக்குவனே ஆகுக, அன்றி இராமனே ஆகுக, ஈண்டு விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக - இங்கு (இவர்க்கு இணையாக வந்து) என்னை எதிர்த்து விலக்குவாரெல்லாம் வந்து விலக்குக; குரக்கின் வெள்ளம் குலக் குலம் ஆகமாளும் கொற்றமும் - குரங்குச் சேனையாகிய வெள்ளம் கூட்டம் கூட்டமாக மடிதற்குக் காரணமாக எனது வெற்றித் திறத்தையும்; மனிதர் கொள்ளும் அலக்கணும் - (என்னால் இராம இலக்குவராகிய) மனிதர் படும்துயரத்தையும்; முனிவர் தாமும் அமரரும் காண்பர் அன்றே - முனிவர்களும் தேவர்களும் (வானிலிருந்தபடி) ஒருங்கே காணுவார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Be it Ilakkuvaṉ, or be it that other one, Irāmaṉ himself,
  2. let all who would stop me here come and stop me; the victory by which the flood of monkeys
  3. will perish clan by clan, and the misery the men will suffer,
  4. the sages and the immortals will surely see.'

What the poem says

Intiracittaṉ accepts the challenge. Let Ilakkuvaṉ or Irāmaṉ, or anyone else who wants to, come and try to stop him. The sages and gods who have gathered to watch will see the monkey hordes destroyed in droves and the two human princes brought to grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilakkuvaṉ āka, maṟṟai irāmaṉē āka, īṇṭu
vilakkuvar ellām vantu vilakkuka; kurakkiṉ veḷḷam
kulak kulam āka māḷum koṟṟamum, maṉitar koḷḷum
alakkaṇum, muṉivartāmum amararum kāṇpar aṉṟē.