கம்பராமாயணம் 9067 · யுத்த 26.83

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இன்னும் இருக்க - யான் (கைக்கொண்டு) உடைய வில்லும் என்னுடைய திண்ணிய தோள்களும் இன்னமும் (அழியாது) உள்ளவரையில்; ஊனுடை உயிர்கள் யாவும் ஒளிப்பு இலாமல் உய்யுமோ - (என்னை எதிர்த்த) உடம்புடன் கூடிய உயிர்கள் எல்லாம் ஓடி ஒளியாமல் பிழைக்கவல்லனவோ? கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று - கூனி வளைந்த உடம்பினை உடைய வானரங்களோடு (இராமஇலக்குவராய) மனிதர்களையும் கொன்று; அவ்வானினும் தொடர்ந்து சென்று கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் - (அவர் செல்லும்) அவ்வானுலகிலும் (அவர்களைத்) தொடர்ந்து சென்று கொல்வேன். (முன்புபோல) மருந்தினாலும் (இப்பொழுது) பிழைக்க மாட்டீர்!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While my bow and my golden shoulders still remain,
  2. can any creature of flesh survive without going into hiding?
  3. I will kill the men along with the hunchbacked monkeys, and go
  4. after them even into that sky and kill them; not even medicine will save you.'

What the poem says

Intiracittaṉ boasts that as long as he has his bow and his arms, no living being that opposes him can survive except by hiding. He will kill the two princes and the stooping monkeys, and chase them even into heaven to kill them again. This time no healing herb will bring them back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉuṭai villum, eṉ poṉ tōḷkaḷum, irukka iṉṉum
ūṉuṭai uyirkaḷ yāvum uyyumō 'oḷippu ilāmal?
kūṉuṭaik kuraṅkiṉōṭu maṉitaraik koṉṟu, ceṉṟu av
vāṉiṉum toṭarntu kolveṉ; maruntiṉum uyya māṭṭīr.