கம்பராமாயணம் 9068 · யுத்த 26.84

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது - செய்கின்ற யாகம் இன்று (நிறைவேறாமல்) தவறியது; “வென்றோம்” என்று கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர்! - (நாங்களே) “வெற்றி பெற்றோம்” என்று (எண்ணி என்னை) வினவுவதற்குக் காரணமான (உம்முடைய) வீரத்தினை எல்லாம் எடுத்துரைப்பவர்களே! கிளத்தல் வேண்டா; தாழ்கின்றது இல்லை - (அவற்றை நீவிர் எடுத்துரைத்தல் வேண்டா (நான் இனியும்) தாமதிக்கின்றது இல்லை; உம்மைத் தனித்தனி தலைகள் பாறச் - உங்களைத் தனித்தனியே தலைகள் சிதறுமாறு; சூழ்க்கின்ற வீரம் என்கைச் சரங்களாய்த் தோன்றும் அன்றே - ஆராய்ந்து அழிக்கவல்ல வீரத்தன்மை என் கையிலுள்ள அம்புகளாய் (நுமது உடம்பின் கண்ணே தைத்து)த் தோன்றும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The sacrifice I was offering has failed today; you who recount all the valour
  2. that makes you ask, "Have we not won?" — there is no need to recount it;
  3. I delay no longer; so that your heads scatter one by one,
  4. the valour that hunts you down will now appear as the arrows in my hand.'

What the poem says

Intiracittu, Irāvaṇaṉ's son, had gone to the shrine of Nikumpalai to perform a sacrifice that would make him invincible. Ilakkuvaṉ, Vīṭaṇaṉ and the monkey army broke it up before it was finished. Now the furious prince turns on the monkeys who are boasting of their success.

He tells them to stop talking: their boasts mean nothing, and his valour will speak for itself in the shape of arrows that strike off their heads one by one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēṭkiṉṟa vēḷvi iṉṟu piḻaittatu; "veṉṟōm" eṉṟu
kēṭkiṉṟa vīram ellām kiḷattuvīr! kiḷattal vēṇṭā;
tāḻkkiṉṟatu illai; ummait taṉit taṉit talaikaḷ pāṟac
cūḻkkiṉṟa vīram eṉ kaic caraṅkaḷāyt tōṉṟum aṉṟē.