கம்பராமாயணம் 9069 · யுத்த 26.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மற்று எலாம் நும்மைப் போல வாயினால் சொல்ல மாட்டேன் - பிற வெற்றித் திறங்கள் எல்லாவற்றையும் குறித்து நும்மைப் போல வாயளவிற் பேசி அமைய மாட்டேன்; வெற்றிதான் இரண்டும் தந்தீர்; விரைவது வெல்லற்கு ஒல்லாம்? - (எனக்கு) வெற்றியை இருமுறை அளித்தீர்; (தோல்வியுற்ற நீவிர் இப்பொழுது) விரைவினை மேற்கொள்வது என்னை வெல்லுவதற்கோ? உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்கக் கற்றிரோ? - நான் உம்மை அடைந்து வெகுண்டு பொருத பொழுது ஒரு முறையேனும் என் முன்னே (அச்சமின்றி) நிற்கக் கற்றுள்ளீரோ? இன்னம் மாண்டு கிடத்திரோ? நடத்திரோதான்? - இனிமேலும் (இங்கு) இறந்து கிடக்கப் போகின்றீர்களோ? அன்றி இவ்விடத்தை விட்டு அகன்று ஓடப்போகின்றீர்களோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As for all the rest, I will not merely say it with my mouth as you do;
- twice already you have handed me victory; is your haste now a way to conquer me?
- When I came at you in rage, did you ever learn to stand
- even once before me? Will you lie dead again? Or will you run?'
What the poem says
Intiracittu continues to taunt the monkeys. He reminds them that he has already defeated them twice in earlier battles, when his serpent-weapon and Brahma's weapon laid the army low.
He asks scornfully whether they have ever managed to stand before him even once, and offers them only two choices: to lie dead on the field once more, or to flee.