கம்பராமாயணம் 9070 · யுத்த 26.86

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“நின்மின்கள்; நின்மின்!” என்னா நெருப்பு எழ விழித்து - (இவ்விடத்தை விட்டு அகல மாட்டோம் என்பீராயின்) 'நில்லுங்கள், நில்லுங்கள்' என்று சொல்லி, அனற்பொறி தோன்ற வெகுண்டு விழித்து; நீண்ட, மின்மின் கொள் கவசம் இட்டான் - மின்னலை ஒத்த ஒளியினைக் கொண்ட கவசத்தை(த் தனது உடம்பில்) அணிந்து கொண்டான்; தூணி வீக்கினான், வீரப்பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான் - அம்பறாத் தூணியை(த் தோளிற்) கட்டினான்; வீரத்திற்கு அறிகுறியான பொன்னாலியன்ற ஒளியினைக் கொண்ட விரல் உறையினைக் கை விரலிற் செறித்தான்; போர் வில் பொறுத்தான் - போர்த் தொழிற்குரிய வில்லினை(க் கையில்) தாங்கினான்; எல்மின் கொள் வயிரத்திண்தேர் ஏறினான், எறிந்தான் நாணி - கதிரவனை ஒத்து ஒளி விடுகின்ற திண்ணிய வயிரத்தேரில் ஏறினான்; வில் நாணினைத் தெறித்து ஒலி செய்தான் (இந்திரசித்து).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Stand, all of you; stand!' he cried, glaring so that fire leapt out, and put on
  2. his long armour that flashed like lightning; he bound on his quiver; on his hand
  3. he fastened the gleaming golden finger-guard of a hero; he took up his war bow;
  4. he mounted his strong diamond chariot that shone like the sun; he twanged the bowstring.

What the poem says

Having taunted the monkeys, Intiracittu arms himself for battle. The verse is a rapid list of actions, each clause ending in a verb: he puts on his armour, ties on his quiver, fits the finger-guard archers wear to protect the hand from the bowstring, takes up his bow, mounts his chariot, and twangs the string.

The twang of the bowstring was a challenge and a warning; its sound alone will terrify the monkeys in the following verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉ miṉkaḷ; niṉmiṉ! 'eṉṉā, neruppu eḻa viḻittu, nīṇṭa
miṉmiṉkoḷ kavacam iṭṭāṉ; vīkkiṉāṉ, tūṇi; vīrap
poṉ miṉkoḷ kōtai kaiyil pūṭṭiṉāṉ; poṟuttāṉ, pōr vil;
el miṉkoḷ vayirat tiṇ tēr ēṟiṉāṉ; eṟintāṉ nāṇi;