கம்பராமாயணம் 9071 · யுத்த 26.87

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊதினான் சங்கம்; வானத்து ஒண்தொடி மகளிர் ஒண்கண்
மோதினார்; 'கணத்தின் முன்னே முழுவதும் முருங்க முற்றக்
காதினான் 'என்ன, வானோர் கலங்கினார்; கயிலை யானும்,
போதினான்தானும், 'இன்று புகுந்தது பெரும்போர் 'என்றார

பொருள் · Meaning in Tamil

சங்கம் ஊதினான்; வானத்து ஒண் தொடி மகளிர் - (பின்பு) சங்கத்தை ஊதினான். (அந்நிலையில்) வானத்திலுள்ள ஒளி பொருந்திய வளையலை அணிந்த தேவமாதர்கள்; ஒண்கண் மோதினார் - (அஞ்சி ஆற்றாதவராய்) கண்களில் மோதிக் கொண்டார்கள்; கணத்தின் முன்னே - (இவ் இந்திரசித்து) ஒரு கணப் பொழுதிற்குள்ளே; முழுவதும் முருக்கி முற்றக் காதினான் என்ன வானோர் கலங்கினர் - (சேனை முழுவதனையும் அழியும்படி வளைத்துக் கொன்றவனாவான் என எண்ணித் தேவர்கள் கலக்கமுற்றார்கள்; கயிலையானும் போதினான் தானும் - கயிலை மலையில் இருக்கும் சிவபெருமானும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனும், இன்று புகுந்தது பெரும்போர் என்றார் - 'இன்று பெரியதொரு போர் உண்டாயிற்று' எனக் கூறினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He blew his conch; the women of heaven with bright bangles beat
  2. upon their bright eyes; thinking, 'In an instant he will crush them all and kill
  3. them utterly,' the gods were shaken; and he of Kailāsa,
  4. and he of the lotus, said, 'Today a great war has begun.'

What the poem says

Intiracittu blows his war conch. In heaven the celestial women strike at their eyes in fear and distress, and the gods are alarmed, sure that he will destroy the whole army in a moment.

Even Civaṉ, who lives on Mount Kailāsa, and Piramaṉ, who sits on the lotus, recognise that a great battle has begun: the coming fight between Intiracittu and Ilakkuvaṉ will decide the war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūtiṉāṉ caṅkam; vāṉattu oṇ toṭi makaḷir oṇ kaṇ
mōtiṉār; 'kaṇattiṉ muṉṉē muḻuvatum murukki muṟṟak
kātiṉāṉ 'eṉṉa, vāṉōr kalaṅkiṉār; kayilaiyāṉum,
pōtiṉāṉtāṉum, 'iṉṟu pukuntatu perum pōr 'eṉṟāra