கம்பராமாயணம் 9072 · யுத்த 26.88

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது; பிழைத்ததேனும், வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது விதியேகொல் என்று அஞ்சினார்; அம்பினாலே
உழைத்தது காண்கின்றோம் 'என்று, உணங்கினார், உம்பர் உள்ளார்.

பொருள் · Meaning in Tamil

இழைத்த பேர் யாகம் தானே - (இந்திரசித்து) செய்யத் தொடங்கிய யாகமானது; யாம் செய்த தவத்தினாலே பிழைத்தது - நாம் (முன்பு) செய்த தவத்தின் காரணமாக (நிறைவேறாமல்) தவறிவிட்டது; பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா - யாகம் தவறினாலும் (இப்போரில்) குரங்குகள் இனிப் பிழைத்திருக்க மாட்டா; அழைத்தது விதியே கொல்? என்று அஞ்சினார் - (இங்கு) அழைத்து வந்தது (தீவினையாகிய) விதியேயாகும் என்று அஞ்சியவர்களாகி; அம்பினோடும் உழைத்தது காண்கின்றோம் என்று - அம்பினோடும் (குரங்குகள்) வருத்துவதனைக் காணப் போகின்றோம் என்று; உம்பர் உள்ளார் உணங்கினார் - தேவர்களாக உள்ளவர்கள் வாட்டமுற்று வருந்தினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The great sacrifice he began has failed, only through the penance we performed;
  2. yet though it has failed, the monkeys cannot survive;
  3. was it fate that summoned them here?' they feared; 'We are about to see them
  4. suffer under his arrows,' they said, and those who dwell above withered in grief.

What the poem says

The gods in heaven speak among themselves. They believe that Intiracittu's sacrifice failed only thanks to the merit of their own past penances. Even so, they fear the monkeys are doomed, as if fate itself had led them to this spot.

Expecting to watch the monkey army torn apart by his arrows, the gods grow pale and distressed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iḻaitta pēr yākamtāṉē yām ceyta tavattiṉālē
piḻaittatu; piḻaittatēṉum, vāṉaram piḻaikkal āṟṟā;
aḻaittatu vitiyēkol eṉṟu añciṉār; ampiṉōṭum
uḻaittatu kāṇkiṉṟōm 'eṉṟu, uṇaṅkiṉār, umpar uḷḷār.