கம்பராமாயணம் 9075 · யுத்த 26.91

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நில், அடா! நில்லு நில்லு! நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது, என்னைப் போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று; குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வாவா 'என்றான் நமனுக்கு நமனாய் நின்றான்.

பொருள் · Meaning in Tamil

நமனுக்கும் நமனாய் நின்றான் - (எதிர்ப்பட்டார் உயிரைவாங்கும் திறத்தில்) எமனுக்கும் எமனாக மேம்பட்டு நின்ற இந்திரசித்து அனுமனை நோக்கி), “நில் அடா! நில்லு நில்லு நீ அடா வாசி பேசிக்கல் எடா நின்றது - 'நில் அடா! நில்லு நில்லு, நீ அடாத வேறுபட்ட மொழிகளைப் பேசிக்கொண்டு கல்லினைப் பெயர்த்து எடுப்பது; என்னை அமரர் காணப் போர்க்களத்து, கொல்லலாம் என்றோ? - என்னைத் தேவர்கள் காணும் படியாகப் போர்க்களத்தில் கொல்லலாம் என்று எண்ணியோ? நன்று; குரங்கு கூடும் அன்றே? - (நின்) செயல் நன்றாயிருக்கின்றது; குரங்கு என்பதனால் நினக்கு இச்செயல் பொருத்தமானதே? நல்லை; போர் வா! வா! என்றான் - நல்ல ஆண்மை உடையாய்! என்னுடன் பொருதற்கு வருக வருக எனக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Stop, fellow! Stop, stop! You, fellow, talking insolently,
  2. lifting a rock — is it so that you can kill me on the battlefield while the gods look on?
  3. Fine; for a monkey, that is fitting, is it not?
  4. Well done; come, come and fight,' said he who stood as Death even to Death.

What the poem says

Intiracittu, described as a Death even to Yamaṉ, the god of death, sees Aṉumaṉ lifting a hill and mocks him. He uses the contemptuous form of address 'aṭā', the way one speaks to an inferior.

He sneers that Aṉumaṉ hopes to kill him with a rock in full view of the gods, adds that such a weapon suits a monkey, and then sarcastically praises his courage and calls him on to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nil, aṭā! nillu nillu! nī, aṭā! vāci pēcik
kal eṭāniṉṟatu, eṉṉaip pōrkkaḷattu, amarar kāṇa,
kollalām eṉṟō? naṉṟu; kuraṅku eṉṟāl kūṭum aṉṟē?
nallai; pōr, vā vā 'eṉṟāṉ namaṉukkum namaṉāy niṉṟāṉ.