கம்பராமாயணம் 9076 · யுத்த 26.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே - வில்லினை ஏந்தி வெகுண்டு நின்ற வீரர்க்கெல்லாம் வீரனாகிய இந்திரசித்தனுக்கு எதிரே; கல் எடுத்து, எறிய வந்த அனுமனைக் கண்ணின் நோக்கி - (அஞ்சாமல்) மலையினைப் பெயர்த்தெடுத்து எறிய வந்த அனுமனைக் கண்களால் உற்று நோக்கி, “மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என் கொலோ வலியது?” என்னா - 'மல் தொழில் திறத்தால் மேம்பட்டு உயர்ச்சி உற்ற தோள்களை உடைய இவ் அனுமனுக்கு அமைந்த வண்ணம் எத்தகையதோ?' என்று; சொல் எடுத்து, அமரர் சொன்னார் தாதையும் துணுக்கம் உற்றான் - (அவனது) புகழைத் தேவர்கள் உயர்த்திக் கூறிப் புகழ்ந்தார்கள். (அனுமனுக்குத்) தந்தையாகிய வாயு தேவனும் (இவனுக்கு என்ன நேருமோ என) மனநடுக்கமுற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Face to face with the hero of heroes who stood in rage, bow in hand,
- looking with their eyes on Aṉumaṉ, who had come with a rock lifted to hurl,
- 'What is the strength of this one whose shoulders rose high through wrestling?'
- the gods said, raising their voices in praise; and his father trembled with dread.
What the poem says
The gods watch Aṉumaṉ advance fearlessly against Intiracittu, a hill raised in his hands. They marvel aloud at the strength of his mighty shoulders, trained in wrestling.
Aṉumaṉ's father, the wind god Vāyu, is seized with anxiety, wondering what will become of his son in a fight with so terrible an archer.