கம்பராமாயணம் 9077 · யுத்த 26.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்ணின் ஆசையின் வெம்பொறிக் குலங்கள் நிமிர்ந்து செல்ல - (அனுமான்) வானத்திலும் திசைகளிலும் வெம்மையுடைய தீப்பொறித்திரள்கள் உயர்ந்து செல்லுமாறு; வயிரக்குன்றம் வீசினன் - திண்ணிய மலையினை (அரக்கர் மேல்) வீசி எறிந்தான்; “ஆயிரம் உரும் ஒன்று ஆகப் பூசின பிழம்பு இது” என்ன - ஆயிரம் இடிகள் ஒரே உருவமாக இயைந்து கூடிய வடிவம் இதுவென்று சொல்லுமாறு; வரும் அதன் புரிவை நோக்கி உலகம் எல்லாம் கூசின - வருகின்ற அந்த மலையின் செயலை நோக்கி உலகமெல்லாம் அஞ்சின; அவ்வரக்கர் கூட்டம் குலைந்தது - அவ்வரக்கர் கூட்டம் நிலை குலைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He hurled the hard hill, so that swarms of hot sparks rose up
- into the sky and toward the quarters; 'This is a mass in which a thousand thunderbolts
- are fused into one,' they said; watching the way it came,
- all the worlds shrank in fear; the host of Rākṣasas was thrown into disorder.
What the poem says
Aṉumaṉ flings the hill. It flies through the air throwing off showers of sparks, and onlookers say it is like a thousand thunderbolts welded into a single body.
All the worlds cower at the sight of it coming, and the ranks of Rākṣasas around Intiracittu break in confusion.