கம்பராமாயணம் 9080 · யுத்த 26.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெதிர் ஒத்த சிகரக் குன்றின் மருங்கு உற விளங்கலாலும் - மூங்கில் ஒத்து வளர்ந்த சிகரத்துடன் கூடிய மலையின் அருகே விளங்குதலாலும்; எதிர் ஒத்த இருளைச் சீறி எழுகின்ற இயற்கையாலும் - எதிர்ப்பட்டுப் பொருந்திய இருளைச் சினந்து மேற்பட்டு விளங்கும் (தன்உடம்பின்) இயற்கை ஒளியினாலும்; கதிர் ஒத்த பகழிக் கற்றை கதிர் ஒளி காட்டலாலும் - ஞாயிற்றின் ஒளித்தொகுதியினை யொத்த அம்பின் தொகுதி மிக்க ஒளியினைத் தோற்றுவித்தலாலும்; உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் - (உடம்பினின்றும் வழியும்) இரத்தத்தின் செம்மையாலும் (அனுமன் உதயமலையில் தோன்றுகின்ற சூரியனை ஒத்துக்காணப்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because he shone beside a hill whose peak rose like bamboo,
- because of his nature that rises raging against the darkness that faces it,
- because the sheaf of arrows like sunbeams in him gave off the light of rays,
- and because of the redness of his blood, he looked like the rising sun.
What the poem says
Pierced all over by arrows and streaming with blood, Aṉumaṉ is compared to the sun at dawn. Each detail fits the comparison: he stands beside a tall hill as the sun appears over the eastern mountain; his own radiance drives back the dark; the arrows bristling from his body look like rays of light; and his blood gives him the red of the rising sun.
The image turns his wounds into a kind of glory.