கம்பராமாயணம் 9081 · யுத்த 26.97

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர் - அவ் அனுமன் தளர்ந்து சோர்வுற்ற நிலையில், அங்கதன் முதலாகவுள்ள வானர சேனைத் தலைவர்கள்; காய்சினம் திருகி வந்து கலந்துளார் தம்மைக் காணா - சுட்டு வெதும்பும் தன்மையதாகிய வெகுளியால் மாறுபட்டுவந்து கூடியவர்களாகிய அவர்களைக் கண்ணுற்று; “நீயிர்கள் நின்மின் நின்மின், இருமுறை நெடியவானில் - 'நீங்கள் (என்னுடன் பொருதற்கு முந்துதலைவிட்டு) நில்லுங்கள் நில்லுங்கள், (என் எதிர்நின்று பொருது) இருமுறை நெடிய விசும்பாகிய துறக்கத்தை; போயவன் எங்கே நின்றான்?” என்றனன், பொருள் செயாதான் - அடைந்தவனாகிய இலக்குவன் எங்கே உள்ளான்?” என வினவினான் (அவ்வானரவீரர்களைப்) பொருட்படுத்தி மதியாதவனாகிய இந்திரசித்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that one sank down exhausted, the leaders headed by Aṅkataṉ,
  2. twisting in burning rage, came and closed in; seeing them,
  3. 'You — stay back, stay back! He who twice went to the lofty heaven,
  4. where does he stand?' said the one who counted them as nothing.

What the poem says

With Aṉumaṉ weakened, Aṅkataṉ and the other monkey commanders rush at Intiracittu in fury. He brushes them aside without interest.

He wants only Ilakkuvaṉ. His sneer that Ilakkuvaṉ has 'twice gone to heaven' mocks the two earlier battles in which Intiracittu's weapons left him lying as if dead, before he was revived.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyavaṉ ayartalōṭum, aṅkataṉ mutalvar āṉōr,
kāy ciṉam tiruki, vantu kalantuḷārtammaik kāṇā,
'nīyirkaḷ niṉmiṉ niṉmiṉ, iru muṟai neṭiya vāṉil
pōyavaṉ eṅkē niṉṟāṉ?' eṉṟaṉaṉ, poruḷ ceyātāṉ.