கம்பராமாயணம் 9082 · யுத்த 26.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெம்பினர் பின்னும் மேன் மேல் சேறலும், வெகுண்டு - (அம்மொழியினைக் கேட்டு) வெகுண்டோராகிய அங்கதன் முதலியோர் இந்திரசித்தனை மேலும் மேலும் நெருங்கிப் பொருதற்குச் சென்றபோது (அவன்) சினந்து; சீயம் தும்பியைத் தொடர்வது அல்லால், குரங்கினைச் சுளிவது உண்டோ? - “சிங்கமானது யானையைத் தொடர்வதன்றிக் குரங்கினை முரண்பட்டுப் பொருவதுண்டோ? அம்பினை மாட்டி என்னே? - (நும்மீது) அம்பினைச் செலுத்தலால் ஆவதென்ன? சிறிதுபோர் ஆற்றவல்லான் தம்பியைக்காட்டித் தாரீர் - சிறிது பொழுது போர் செய்யவல்லவனாகிய இராமனது தம்பியை (எனக்குக் காட்டித் தாராதீராகி; சலத்தின் சாதிரோ? - (வீண்) வெகுளியால் இறந்தொழிவீரோ? என்று கூறினான் (இந்திரசித்து).
ஆங்கிலம் · English translationAI
Translation
- When those enraged pressed on, again and again, he grew angry: 'A lion
- may hunt an elephant, but does it ever rage at a monkey?
- What use is it to waste my arrows on you? Of the one who can fight a little,
- show me the younger brother; or will you die in your useless anger?'
What the poem says
The angered monkey chiefs keep pressing forward, and Intiracittu answers with contempt. A lion chases elephants, he says, not monkeys; it is beneath him to spend arrows on them.
He demands that they show him the younger brother of Irāmaṉ, 'who can fight a little', meaning Ilakkuvaṉ, and asks whether they would rather simply die for nothing in their rage.