கம்பராமாயணம் 9083 · யுத்த 26.99

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அனுமனைக் கண்டிலீரோ? அவனினும் வலியிரோ? என்
தனு உளதன்றோ? தோளின் அவ் வலி தவிர்ந்தது உண்டோ!
இனம் முனை தீர்கிலீரோ? எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதனைக் காட்டி, நும்தம் மலைதொறும் வழிக் கொளீரே. '

பொருள் · Meaning in Tamil

அனுமனைக் கண்டிலீரோ? அவனினும் வலியிரோ - (என்னுடைய அம்புகளால் அயர்ச்சியுற்ற அனுமனைக் கண்டீர் அல்லீரோ? அவ்வனுமனைக் காட்டிலும் (மிக்க) வலிமை உடையீரோ? - என்தனு உளதன்றோ? தோளின் அவ்வலிதவிர்ந்தது உண்டோ? - (எனது) வில்லானது (அழிவின்றி) உள்ளதன்றோ? (என்) தோள்களின் (முன்பும் உம்மைக்கொன்ற) அத்தகைய வன்மை குறைந்து போயிற்றோ? இனும் முனை நீர் அலீரோ? எவ்வலி ஈட்டி வந்தீர் - இன்னும் போர் முனையில் முன்னே வந்த நீங்களே அல்லீரோ? எத்தகைய வன்மையினை(ப் புதுவதாக)ச் சம்பாதித்து வந்துள்ளீர்கள்? மனிசனைக் காட்டி நும்தம் மலைதொறும் வழிக் கொளீரே' - (இலக்குவனாகிய) மனிதனை (என்முன் காட்டிவிட்டு நுமக்குரிய மலை தோறும் (வந்த) வழியே திரும்பிச் செல்வீராக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Did you not see Aṉumaṉ? Are you stronger than he? Is my
  2. bow not still here? Has that strength gone from my shoulders?
  3. Are you not the same ones who came to the front before? What new strength have you gained?
  4. Show me the man, and then take the road back, each to your own hills.'

What the poem says

Intiracittu goes on taunting the monkey leaders. They have just seen Aṉumaṉ, the strongest of them, brought down; his bow and his arms are as strong as ever; and they are the same troops he has beaten before.

He tells them to point out 'the man', Ilakkuvaṉ, and then go home to their mountains. Calling him merely a man is itself an insult from a demon prince.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉumaṉaik kaṇṭilīrō? avaṉiṉum valiyirō? eṉ
taṉu uḷataṉṟō? tōḷiṉ av vali tavirntatu uṇṭō!
iṉum muṉai nīr alīrō? ev vali īṭṭi vantīr?
maṉicaṉaik kāṭṭi, numtam malaitoṟum vaḻikkoḷīrē.'