கம்பராமாயணம் 9084 · யுத்த 26.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று உரைத்து, இளவல் தன்மேல் - என்று இவ்வாறு கூறி இளையோனாகிய இலக்குவன் மீது; எழுகின்ற இயற்கை நோக்கி - (இந்திரசித்து, போருக்கு) எழுகின்ற தன்மையை நோக்கி; குன்றமும் மரமும் வீசிக் குறுகினார் - (வானரவீரர்கள்) மலைகளையும், மரங்களையும் வீசி அவனை) நெருங்கினார்கள்; மேருவை உருவித் தீர்வ பகழிமாரி - மேருமலையினையும் ஊடுருவிப் பிளப்பனவாகிய அம்புமழை; ஒன்று அல, கோடி கோடி - ஒன்று அல்ல கோடி கோடி என்னும் பேர் எண்ணின் அளவாக (இந்திரசித்தினால் எய்யப்பெற்றது); குழாங்கள் தோறும் சென்றன நுழைந்தன - வானரக் கூட்டங்கள் தோறும் சென்று நுழைந்தன; வலியும் ஓய்ந்தார் - (அவற்றால், வானரவீரர்கள் தம் வலிமையினையும் இழந்தனர்.
ஓய்தல் - தளர்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, seeing how he was rising to go against the younger prince,
- they hurled hills and trees and closed in on him; into every troop
- went a rain of arrows that could pierce right through Mount Mēru,
- not one but crores upon crores, burrowing in; and their strength gave out.
What the poem says
Seeing Intiracittu turn to seek out Ilakkuvaṉ, the monkey warriors throw hills and trees and crowd in to stop him.
He answers with a downpour of arrows, each strong enough to pierce Mount Mēru, numbering not one but millions upon millions. They sink into every band of monkeys, and the warriors lose all their strength.