கம்பராமாயணம் 9087 · யுத்த 26.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“கார் ஆயிரம் உடன் ஆகியது” எனல் ஆகிய கரியோன் - மழைமேகங்கள் ஆயிரம் ஒன்று கூடின என்னும் படி அமைந்த கரிய மேனியனாகிய இந்திரசித்து; ஓர் ஆயிரம் பரி பூண்டது ஓர் உயர்தேர் மிசை உயர்ந்தான் - ஓர் ஆயிரம் குதிரைகள் பூட்டியதோர் உயர்ந்த தேரின் மேல் உயர்ந்து தோன்றினான்; நேர் ஆயினர் இருவோர்களும் - (இந்திரசித்து, இலக்குவன் என்னும்) இருவரும் நேரே எதிர்த்தனர்; நெடுமாருதி, நிமிரும் பேர் ஆயிரம் உடையான் என - நெடியவனாகிய அனுமன் (திரிவிக்கரமனாக) ஓங்கிய ஆயிரம் திருப் பெயர்களை உடைய இறைவனாகிய திருமாலைப் போன்று; திசை எங்கணும் பெயர்ந்தான் - திசைகள் எங்கும் இரிந்து சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The dark one, of whom one could say 'a thousand rain-clouds have come together',
- rose high upon a lofty chariot yoked with a thousand horses;
- the two came face to face; and tall Māruti, like the one of a thousand names
- who grew to the sky, moved across every quarter.
What the poem says
The two champions now face each other. Intiracittu, dark as a thousand storm clouds massed together, towers on a high chariot drawn by a thousand horses.
Aṉumaṉ, carrying Ilakkuvaṉ, covers every direction as swiftly as Tirumāl, the god of a thousand names, who in his dwarf incarnation grew to fill the universe and measured all the worlds in his strides.